28.5 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

இலங்கை அதிபர் கோத்தபயா வெளிநாடு தப்பியோட்டம்: சபாநாயகர் தகவல்

🔥 Views : 7
👁 Reading Now : 40

இலங்கை அதிபர் கோத்தபயா, அண்டை நாட்டில் உள்ளதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். அதே நேரத்தில் அவர் எங்கு உள்ளார் என்ற தகவலை அவர் கூறவில்லை.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 9 ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதை அடுத்து, கோத்தபயா அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். அன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அவர் பதவி விலக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை ஏற்று கொள்வதாகவும், விரைவில் பதவி விலகுவதாகவும் கோத்தபயா கூறியிருந்தார். இந்நிலையில் இலங்கை சபாநாயகர் அபேவர்தனா யாபா கூறுகையில், கோத்தபயா இலங்கையை விட்டு வெளியேறி அருகில் உள்ள ஒரு நாட்டில் அடைக்கலம் நாடியுள்ளதாகவும் தெரிவித்தார். அதேநேரத்தில், கோத்தபயா எங்கு உள்ளார் என்ற தகவலை அவர் கூற மறுத்து விட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles