26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

துன் மகாதீரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னார் நஜிப் ரசாக்

துன் மகாதீர் 97ஆவது பிறந்தநாளை எய்தியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்களை முகநூலில் பதிவு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்.
தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளைத் தர இறைனை வேண்டுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வாழ்த்துக்களை நஜிப் வெளியிட்ட பின்னர் 17,000 பேர் அதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு 1,000க்கும் அதிகமானோர் தங்களின் கருத்துக்களை வெளியிட்டும் இருந்தனர்.
தற்போது இருவருக்குமிடையே கடுமையான மோதல் உருவாகி இருக்கும் நிலையில் நஜிப், மகாதீருக்கு வாழ்த்துகளைக் கூறியது பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.
இணையதள பயனர் ஒருவர் குறிப்பிடும்போது, நஜிப் வாழ்த்து தெரிவித்த செய்கையானது விரோதிக்குக் கூட கெடுதல் நினைக்காத உங்களுக்கு பெரிய மனது என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், ஒருவர் மகாதீர் நஜிப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்ல வேண்டும் என்றும், வயது முதிர்ந்த நிலையில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு இருப்பது நல்லது அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இனி நீங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் போது பரஸ்பரம் வாழ்த்துக்களைச் சொல்ல நான் எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles