28.5 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பெட்ரோனாஸின் இரு துணை நிறுவனங்களை நீதிமன்ற அமீனா கைப்பற்றினார்

🔥 Views : 5
👁 Reading Now : 32

பிரெஞ்சு நீதிமன்ற உத்தரவின் பேரில் அஸெர்பைஜானில் உள்ள பெட் ரோனாஸுக்குச் சொந்தமான இரு நிறுவனங்களை நீதிமன்ற அமீனா கைப்பற்றியுள்ளார்.
சூலு சுல்தானின் வாரிசுகள் சபா சம்பந்தமாக மலேசியாவின் மீது தொடுத்துள்ள இழப்பீடு வழக்குகளின் அடிப்படையில், மலேசியா அவர்களுக்குச் செலுத்த வேண்டிய 6,259 கோடி ரிங்கிட் இழப்பீட்டில் ஒரு பகுதியாக இந்த இரு துணை நிறுவனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
1878 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ்ஷாரின் காலத்தில், சபாவை அப்போதைய சூளு சுல்தான், சுல்தான் ஜமால் என்பவர் சபாவின் மகாராஜாவாக விளங்கிய பேரன் என்பவருக்கு சபாவை ஒப்படைத்ததற்காக ஆண்டுக் கட்டணமாக 5,000 மெக்சிகோ டாலர் (ரிம. 5,330) பெற்றுக் கொள்ள சம்மதித்தார்.
அந்தக் கட்டணமானது 2013இல் சூலு போராட்டவாதில் லாஹாட் டத்துவில் படையெடுத்துச் சென்ற பின்னர், நிறுத்தப்பட்ட்டது.
அதனை எதிர்த்து சுல்தானின் வாரிசுகள் மலேசியாவுக்கு எதிரான வழக்கைத் தாக்கல் செய்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles