
160 கோடி ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்பட்ட புக்கிட் ஜாலில் விளையாட்டு அரங்கை சிப்பாங்கியிற்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
1998ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்காக இந்த விளையாட்டு ரங்கம் நிர்மாணிக்கப்பட்டது.
புதிய விளையாட்டு அரங்கத்தை நிர்மாணிக்க குறைந்தது 200 கோடி ரிங்கிட் செலவு செய்வதோடு மற்ற வசதிகளுக்காக கூடுதலாக 160 கோடி ரிங்கிட்டும் செலவிட வேண்டும்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் இம்மாதிரியான ஊதாரித்தனமான செலவு செய்வதன் நோக்கம்தான் என்ன என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
