
பிரதமர் இஸ்மாயில் சப்ரியை ஆதரிக்க தாம் பெர்சத்துவுக்கு துணைப் பிரதமர் பதவி கேட்டதாகவும் அதனை இப்போது வலியுறுத்துவதாகவும் முஹிடின் யாசின் குறிப்பிட்டு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார்.
துணைப் பிரதமர் பதவியை இப்போது கேட்பதன் நோக்கம் என்ன என கேள்விகள் தொடுக்கப்படுகின்றன.
தற்போதைய நிலையில் பிரதமர் பதவி பதவி விலக நேர்ந்தால் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் துணைப் பிரதமர் அப்பதவியில் அமர முடியும். எனவே, அதனைப் பயன்படுத்த முஹிடின் வலியுறுத்துவதாகத் தெரிகிறது.
மேலும், அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து பெர்சத்து மிகவும் நிலைகுலைந்து, வலுவின்றி இருப்பதை மீண்டும் புதுப்பிக்கும் நோக்கத்தை அவர் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
