27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

மாலத்தீவு தப்பிச் சென்றார் இலங்கை அதிபர் கோத்தபய!

🔥 Views : 6
👁 Reading Now : 58

இலங்கை அதிபர் கோத்தபய மாலத்தீவுக்கு தப்பி சென்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் நிலவி வரும் கடும் விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாத மக்கள், அந்நாட்டு அரசுக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை, லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர். போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைவதற்கு முன், கடற்படை உதவியுடன் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேறி, கடற்படைக்கு சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்து இரண்டு ஹெலிகாப்டர்களில் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர், கொழும்பு நகரில் உள்ள கட்டுநாயகா விமானப் படை தளத்திலிருந்து ராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பி சென்றார்.
அதிகாலை 3 மணி அளவில் அவர் மாலத்தீவுக்கு சென்றடைந்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles