26.4 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

ஜோ லோவுடனான பண மோசடிக்கான சமரசத் தீர்வு வெளிப்படையாக இருக்க வேண்டும்

🔥 Views : 13
👁 Reading Now : 42

ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் கொள்ளைக்காரன் ஜோ லோ உடனான சமரசத் தீர்வை சட்டத் துறைத் தலைவர் ஹருண் இட்ருஸ் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அது அரசுக்கு இழுக்கையே கொண்டுவரும் என்று கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மூடு மந்திரம் ஏதும் இருக்கக் கூடாதென அவர் கேட்டுக் கொண்டார்.
பொதுமக்களின் பணம் ஊழல் அரசியல்வாதி ஒருவரின் மூலம் கொள்ளையடிக்கப்பட்டது. அதில் ஜோ லோவின் பங்கு அதிகமாக இருப்பதால் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, என்ன நடக்கப் போகிறது என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் சட்டத் துறைத் தலைவர் வெளிப்படையாக நடந்து கொண்டு தமது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்
மர்மமான முறையில் பேச்சுவார்த்தை நடப்பதோ அல்லது அவரிடமிருந்து இழப்பீடு கோருவதோ கூடாது என்றும் அவர் எச்சரித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles