25.3 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

169 நாடுகளில் உள்ள பெட்ரோனாஸின் சொத்துக்களுக்கு பங்கம் வரும்

🔥 Views : 15
👁 Reading Now : 40

சுலு சுல்தானின் வாரிசுகளின் வழக்கறிஞர் போல் கோஹன் கூறும்போது, 169 நாடுகளில் உள்ள பெட்ரோனாஸின் சொத்துகளுக்கு ஆபத்து வரும் என்று எச்சரித்துள்ளார்.
சபாவை ஒப்படைத்தற்கான ம ஆண்டுக் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய மலேசியாவுக்குச் சொந்தமான பெட்ரோனாஸ் நிறுவனத்தின் அஸெர்பைஜானில் உள்ள துணை நிறுவனங்களை அது கைப்பற்றி உள்ளதாகவும், இந்த நடவடிக்கை ஐநா சாசனத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் இருக்கும் பெட்ரோனஸின் சொத்துகளுக்கு சொந்தம் கொண்டாட சூலூ சுல்தான் வாரிசுகளுக்கு உரிமை உள்ளதாக அவர் தெரிவித்தார்.’
இதனிடையே இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் மலேசிய அமலாக்கத் தரப்பினர், அஸெர்பைஜானில் இருக்கும் இரு பெட்ரோனாஸ் துணை நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அதனை தடுத்து நிறுத்த மலேசியா சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளனர்.
சபாவின் உரிமையை பிரிட்டிஷாருக்கு ஒப்படைத்தபோது, அதற்கு ஈடாக மலேசியா 149 கோடி ரிங்கிட்டை சுலு சுல்தானின் வாரிசுகளுக்குத் தரவேண்டுமென்று மாட்ரிட்டில் இருக்கும் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles