26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

கூட்டணி இல்லாவிட்டால் பெஜுவாங் கரை சேராது.

Pejuang (பெஜுவாங்) மற்ற கட்சிகளோடு கூட்டு சேராமல் போனால் பொதுத்தேர்தலில் மலாக்கா, ஜோகூரில் அடைந்த தோல்வியைப் போல அடைய நேரிடும் என Nuzanthara Academy (நுசாந்தார அக்காடெமி)யின் Azmi Hasan (அஸ்மி ஹசான்) எச்சரித்தார்.
அது பக்காத்தானோடு ஒத்துழைக்க விரும்பவில்லை என்றால் வாரிசான், மூடா போன்ற கட்சிகளோடு இணைந்து போட்டியிட்டால் ஓரளவு வாய்ப்பு இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பெஜுவாங்கிற்கு உறுப்பினர் எண்ணிக்கை, நிதிவளம், தேர்தல் இயந்திரம் போன்றவை இல்லாத நிலையில் தனித்தே போட்டியிட்டால், பொதுத்தேர்தலுக்குப் பின் அது காணாமல் போக நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles