34 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவவில்லை

நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவவில்லை என்றும் அது பீடித்ததாக நம்பப்படும் 9 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு அந்நோய் பீடிக்கப்படவில்லை என்று தெரிவதாக சுகாதார அமைச்சர் Khairi Jamaludin (கைரி ஜமாலுடின்) தெரிவித்தார்.
இந்நோய் கண்ட நாடுகளில் இருந்து வருவோர், 21 நாளைக்கு முன்னரே உடல்நிலையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
இந்நோய் கண்டவர்களுக்கு காய்ச்சல், உடல்சோர்வு, தலைவலி, தோல் அரிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். முகத்தில் தோன்றும் அரிப்பு உடல் முழுக்க பரவும்.
ஆப்பிரிக்க நாடுகளில் உருவான இந்நோய் இப்போது 74 நாடுகளில் பரவி 16,836 பேர் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles