
தற்போது 2,000க்கும் அதிகமான மூத்த குடிமக்கள் மருத்துவமனைகளில் அநாதைகளாகப் கைவிடப்பட்டிருக்கும் செய்தி நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிக் கருத்துரைத்த அரசமைப்பு நிபுணர் பேராசிரியர் டாக்டர் Shad Saleem Faroock (ஷாட் சலீம் ஃபாரூக்), பெற்றோரை பராமரிக்காது அநாதைகளாகக் கைவிடும் பிள்ளைகக்குத் தண்டனை அளிப்பதோடு பெற்றோரைப் பராமரிக்கும் செலவை அவர்களிடமிருந்தே வசூலிக்க வேண்டுமென குறிப்பிட்டார். சிங்கப்பூரில் இம்மாதிரியான கட்டாய பராமரிப்புக் கட்டணம் வசூலிப்பதை நாமும் அனுசரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
