28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

அறிமுகமான 24 மணி நேரத்துக்குள் தங்கும் விடுதி அறையில் கள்ள உறவு

🔥 Views : 6
👁 Reading Now : 51

கெடா, கூலிமிலுள்ள தங்கும் விடுதி அறையொன்றில் தகாத உறவில் ஈடுபட்டிருந்த அவ்விருவரையும் கூலிம் மாவட்ட இஸ்லாமிய சமய அமுலாக்க அதிகாரிகள், கையும் களவுமாகக் கைது செய்தனர். அத்தங்கும் விடுதியில் சமய அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது அவ்விருவரும் பிடிபட்டனர். ஏற்கனவே திருமணமான 24 வயது அவ்வாடவர், அறைக்குள் நுழைந்த அதிகாரிகளின் கண்களில் படக்கூடாது என்பதற்காகக் கட்டிலுக்குக் கீழ் ஒளிந்து கொண்டுள்ளார் பணி நிமித்தமாக பேராக்கில் இருந்து கெடா வந்திருந்த போது, அப்பெண்ணுடன் ஒரே நாளில் தொடர்பு ஏற்பட்டு, தங்கும் விடுதி வரை அழைத்துச் சென்று தற்போது கைதாகியிருக்கிறார் அவ்வாடவர்.தகாத உறவில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தால் அவ்விருவருக்கும் தலா மூவாயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது ஈராண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என மாவட்ட சமய அமுலாக்க அதிகாரி அன்வார் ஷாரிஃபுடின் மாட் சாட் ( Anwar Shariffudin Mat Saad) தெரிவித்தார்ரகள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles