31.3 C
Kuala Lumpur
Saturday, August 1, 2026

Vetri

தூருன் மலேசிய பேரணியினர் நால்வரிடம் வாக்குமூலம்

🔥 Views : 24
👁 Reading Now : 53

கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் சோகோ பேரங்காடியின் முன் தூருன் மலேசியா பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்கள் பணவீக்கம், விலைவாசியை எதிர்த்துக் குரல் கொடுத்தனர். அதில் கலந்து கொண்ட நால்வரின் வாக்குமூலத்தை சட்டத்துறை அலுவலகம் கோரியுள்ளதால், அந்த நால்வரும் அழைக்கப்பட்டு அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் என்று டாங் வாங்கி போலீஸ் தலைவர் ஏசிபி நூர் டலிலான் யஹாயா தெரிவித்தார். இதற்கு முன்னர் 27 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஜூலை 23ஆம் தேதி நடைபெற்ற அப்பேரணியில் 100க்கும் அதிகமான தனிநபர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles