31.3 C
Kuala Lumpur
Saturday, August 1, 2026

Vetri

இந்து சங்கத்திற்கு வந்த பரிதாபம்! தலைமைக்காக பூட்டை மாற்றி மாற்றி வீதியில் வாக்குவாதம்!

🔥 Views : 21
👁 Reading Now : 40

கடந்த வாரம் நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் 10 மத்திய செயலவைக்கான தேர்தலில், கணேசன் தங்கவேலு உள்பட அவருக்கு ஆதரவாக போட்டியிட்ட அனைவரும் வெற்றிபெற்ற நிலையில், மோகன் ஷான் தோல்வியுற்றார், பின் அவரே மேடையில் இருந்து நான் மத்திய செயலவையில் இருந்து விலகுகிறேன் எனச் சொல்லி அனைவரையும் கை கூப்பி வணங்கிச் சென்றார். எனினும் பதவியிலிருந்து விலகாமல் அன்று நடந்த கூட்டம் செல்லாது “நான் தான் தற்பொழுதும் இந்து சங்க தலைவர்” என மோகன் ஷான் பிடிவாதம் பிடித்து வருகிற்றார். மேலும் இந்து சங்கக் கட்டடம் எனது பொறுப்பிலேயே உள்ளது, என்று புதிய பூட்டு போட்டு சங்கத்தின் கதவையும் பூட்டியுள்ளார். தோல்வியைத் தழுவிய பிறகு புதிது புதிதாக குழப்பத்தை டத்தோ மோகன் ஷான் ஏற்படுத்துகிறார் என தற்போதைய தலைவர் கணேசன் தங்கவேலு போலீஸ் நிலையத்தில் புகார் செய்து மோகன் ஷான் போட்ட பூட்டை உடைத்து மீண்டும் இவர் ஒரு புதிய பூட்டு போட்டுள்ளார். பின் அங்கு வந்த மோகன் ஷான் மற்றும் அவரது தரப்பினர் புதிய புட்டிற்கான சாவியையே தருமாறு கணேசன் தங்கவேலுவிடம் வீதியில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. இவ்வாறு மலேசிய இந்து சங்கத்தின் தலைமை பொறுப்பிற்கான பதவி சண்டை வீதி வரைக்கும் வந்துள்ளது பெரும் பரிதாபமே.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles