
கடந்த ஜூலை 27ஆம் தேதி மலேசிய இந்து சங்கத்தின் தேர்தலில் கணேசன் தங்கவேலுவின் தலைமையில் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. அது நடந்த பின்னர் சங்கத்தின் பொறுப்புகளைப் புதிய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்காத முன்னாள் தலைவர் மோகன் ஷான் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றும் இன்னும் தாமே தலைவர் என்று கூறி வருகிறார். அது பற்றிப் புதிய தலைவர் கணேசன் கூறும்போது, நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்கத் தவறினால் மோகன் ஷான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கணேசன் தெரிவித்தார்
