34 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

போலீசாரின் நடவடிக்கைகளை வீடியோ படமெடுப்பதைத் தடுக்க சட்டம் ஏதுமில்லை

குற்றச் செயல்களைத் தடுக்கும் போலீசாரின் நடவடிக்கைளை வீடியோ படமெடுத்து அதனைப் பொதுவில் ஒளிபரப்புவதைத் தடுக்கும் சட்டம் எதுவும் இல்லையென்று சுதந்திரத்திற்கான வழக்கறிஞர் அமைப்பின் இயக்குநர் Said Malek) சைட் மாலேக் குறிப்பிட்டார்.அதனைத் தடுக்கும் சட்டம் எந்த நாட்டிலும் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வீடியோ படமெடுப்பதை அரசு நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் போலீசாரின் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.வீடியோ படமெடுப்பதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் கூறுவதற்கு முன்னர், சட்டத் துறை அலுவலகத்தோடு கலந்தாய்வு செய்திருக்க வேண்டுமென சைட் மாலேக் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles