34 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

பிரதமரின் ஜப்பானிய பயணத்திற்கு எவ்வளவு செலவிடப்பட்டது

அமைச்சர்களும் அதிகாரிகளும் அலுவல் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அதற்கான செலவு விவரங்களைச் சம்பந்தப் பட்ட அமைச்சுகள் வெளியிடுவதில்லை என்று செபூத்தே எம்பி Teresa Kok (திரேசா கொக்) குறிப்பிட்டார். மே மாதம் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஜப்பானுக்குச் சென்றபோது அவரோடு பல அதிகாரிகள் தனியார்துறை தொழில் முனைவோரும் உடன் சென்றனர். அந்தப் பயணத்திற்கு ஆன மொத்த செலவை விளக்க வேண்டுமென்று தாம் கோரியபோது, பிரதமர் துறை அமைச்சர் Abdul Latif Amad (அப்துல் லத்திப் அமாட்) பயணத்தின் நோக்கம் பாற்றிக் குறிப்பிட்டு மற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை. இப்படி பதில் சொல்லாமல் ஓடினால் அதில் ஏதோ முறைகேடு இருப்பதாகச் சந்தேகம் வலுக்கும் என்று திரேசா குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles