
இயக்குனர் விஜயசிங்கத்தின் காதல் அது ரகசியமானது திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா டத்தோ B. சகாதேவன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. இயக்குனர் விஜயசிங்கம் தொலைக்காட்சி சினிமா துரைகளில் பல அனுபவங்களையும் திறமைகளையும் கொண்டவர், அவரது திரைப்படம் ரசிகர்களின் பேராதவரை பெறவேண்டுமென்று வாழ்த்தினார். இசை விழாவில் படத்தின் நடிகர்கள்,தொழில்நுட்ப கலைஞர்கள், பாடகர்கள் இசையமைப்பாளர்களையும் அறிமுகம் செய்து வாழ்த்தி நினைவு கேடையங்களை வழங்கினார் இயக்குனர் விஜயசிங்கம்.

காதல் நம் வாழ்கையில் ஒரு வலுவான பந்தம், சிலருக்கு அது காலம் கடந்தும் நிலைத்திருக்கும் என்பதயே இத்திரைப்படம் சொல்லும். மலேசிய தமிழ் திரைப்படங்கள் இப்போது வேகமாக மேல்நோக்கி செல்கிறது. ரசிகர்களின் ஆதரவு பெருகினால் நாமும் வெற்றி பெற்று இத்துரையில் உச்சத்தை தொடலாம் என்றார்.
செப்டம்பர் ,15 முதல் காதல் அது ரகசியமானது திரைப்படத்தில் நான் உருவாக்கிய காதலர்களை சந்திக்க வாருங்கள் அவர்களின் காதலை மகிழ்ந்து உணருங்கள்



