24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

ராணுவ பயிற்சி தீவிரம்: சீனா-தைவான் இடையே போர் பதற்றம்

🔥 Views : 6
👁 Reading Now : 23

தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இந்தநிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்தது. மேலும், தைவானை சுற்றி கடலில் போர் பயிற்சிகளை தீவிரமாக நடத்தியது. சில இடங்களில் தைவான் நாட்டு கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் போர் பயிற்சி மேற்கொண்டது. இதனால் தென்சீன கடல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles