31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

அடுக்குமாடி நிர்வாகம் கட்டுமான நடவடிக்கையில் தலையிட்டதில்லை

🔥 Views : 9
👁 Reading Now : 36

Armanee Terrace Condominium (அர்மானி டெரஸ்) அடுக்குமாடி கூட்டு நிர்வாகம் Saujana Triangle Sdn Bhd (STSB) (செளஜானா டிரை ஏங்கல்) நிறுவனத்தின் கட்டுமானத் திட்டத்தில் தலையிடவில்லை என்று ஷா ஆலம் உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த அடுக்குமாடியின் பி புளோக் கட்டுமானத்தில் தலையிட்டு அதன் நடவடிக்கைக்கு ஊறு விளைவித்ததால், தனது கட்டுமானம் தடைபட்டதாக அந்நிறுனம் குற்றம் சாட்டியது.. அதனால் வீடுகளை வாங்க பதிவு செய்தோருக்கு தமது நிறுவனம் 10.6 கோடி ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டி வந்ததாக அதன் நிர்வாகம் குற்றம் சாட்டி அடுக்குமாடி கூட்டு நிர்வாகத்தின் மீது வழக்கைத் தொடர்ந்தது. இதில் அடுக்குமாடி கூட்டு நிர்வாகம் கட்டுமானம் மெதுவாகச் செயல்படுவதற்குக் காரணமில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, 120,000 ரிங்கிட்டை செலவுத் தொகையாக செளஜானா டிரை ஏங்கல் நிறுவனம் மேற்கண்ட கூட்டு நிர்வாகத்திற்கும் அதன் முன்னாள் நிர்வாகத்திற்கும் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles