31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

மலாய்காரர்களை மட்டும் கொண்ட மகாதிரின் இனவாத கூட்டணி!

🔥 Views : 9
👁 Reading Now : 45

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்திற்கு முன்னுரிமை வழங்கும் புதிய கூட்டணியை தொடங்கியிருக்கும் டாக்டர் மகாதீரின் வியூகம் ஏற்புடையதாக இல்லையென பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இது போன்ற முயற்சிகளை தாம் ஆதரிக்கப் போவதில்லையென நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறினார். மலாய்க்காரர்கள் மட்டுமின்றி அனைத்து மலேசியர்களையும் கொண்ட சிறந்த தலைமைத்துவம்தான நல்ல நிர்வாகத்திற்கு தேவையென அன்வார் வலியுறுத்தினார். கூடுதலான பல்லின அணுகுமுறைதான் நாட்டிற்கு தேவைப்படுவதாக பி.கே.ஆர் தலைவருமான அன்வார் கூறினார். இதனிடையே மலாய்க்காரர்களை மட்டுமே கொண்ட Gerakan Tanah Air என்ற புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் மகாதீர் அறிவித்திருக்கிறார். இந்த கூட்டணியில் மலாய்க்கார்களை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள், அரசு சார்பற்ற இயக்கங்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் நிபுணத்துவர்களும் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles