28.5 C
Kuala Lumpur
Sunday, June 21, 2026

Vetri

மலேரியா பரலைத் தடுக்க அந்நியத் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

🔥 Views : 5
👁 Reading Now : 34

மலேசியாவுக்கு கொண்டு வரப்படும் அந்நியத் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பினாங்கில் அடையாளம் காணப்பட்டதைப் போல் நகர்ப்புற மலேரியா நோய்ப் பரவல் ஏற்படுவதைத் தடுக்க இந்நடவடிக்கை அவசியமாவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இருந்த போதிலும் நாட்டில் மலேரியா நோய்ப் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறிய அவர், அந்நோயினால் மரணச் சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை என்றார். இதனைக் கருத்தில் கொண்டு அந்நியத் தொழிலாளர்கள் பணியைத் தொடங்குவதற்கு முன்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles