28.8 C
Kuala Lumpur
Monday, June 22, 2026

Vetri

பிஎன்எஸ் நிறுவனத்திற்கு 27 ரோந்துக் கப்பல்களைக் கட்ட அழைப்பாணை கொடுக்கப்பட்டது

🔥 Views : 7
👁 Reading Now : 70

6 போர்க் கப்பல்களைக் கட்ட குத்தகை வழங்கப்பட்ட Boustead Navel Shipyard (போஸ்டெட் நேவல் ஷிப்யார்ட்) நிறுவனம் (பிஎன்எஸ்) ஒப்பந்தப் பணம் 900 கோடி ரிங்கிட்டில் 600 கோடி ரிங்கிட்டைப் பெற்று அதில் 400 கோடி ரிங்கிட் கடனை அடைத்துள்ளதால், கப்பல்கள் எதனையும் கட்டி முடிக்காமல் பிரச்சினையில் மூழ்கியுள்ளது. இதே பிஎன்எஸ் நிறுவனத்திற்கு நஜிப் ரசாக்கின் காலத்தில் 27 ரோந்துக் கப்பல்களை நிர்மாணிக்க 1995 ஆம் ஆண்டில் முதலில் 536 கோடி ரிங்கிட்டும் பின்னர் 2007ஆம் ஆண்டு 140 கோடி ரிங்கிட்டும் ஆக மொத்தம் 675 கோடி ரிங்கிட் தரப்பட்டுள்ளது. 27 ரோந்துக் கப்பல்களில் இதுவரை வெறும் 6 கப்பல்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக Mad Sabu (மாட் சாபு) வும், ஜசெகவின் Liew Chin Tong (லியூ சின் தோங்)கும் குறிப்பிட்டனர். ஆக, இந்தப் ரோந்துக் கப்பல் விவகாரத்திலும் நஜிப் ரசாக் பதில் சொல்லியாக வேண்டுமென அவர்களிருவரும் கேட்டுக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles