26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்சே முடிவு

🔥 Views : 15
👁 Reading Now : 49

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியதை தொடர்ந்து ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபச்சே மனைவியுடன் முதலில் மாலத்தீவு தப்பி ஓடினார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்து உள்ளார். அவர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தங்கி இருக்கிறார். அவரை பாதுகாப்பு காரணமாக அறைக்குள்ளேயே இருக்குமாறு தாய்லாந்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அவர் விரைவில் தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்ப இருப்பதாக அவரது உறவினர் உதயங்க வீர துங்கா தெரிவித்தார். இதனால் வருகிற 24-ந்தேதி அவர் சொந்தநாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை மக்கள் இன்னும் அவர் மேல் கோபமாக தான் உள்ளனர். இதனால் மீண்டும் இலங்கை வந்தால் பாதுகாப்பு இருக்காது என அவர் நினைக்கிறார். இதையடுத்து அவர் தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles