32.4 C
Kuala Lumpur
Sunday, July 26, 2026

Vetri

நான் இஸ்கந்தர் குட்டியா? இழப்பீடு வேண்டும் – துன் மகாதீர்

🔥 Views : 23
👁 Reading Now : 22

2017 ஜுலை 30ஆம் தேதி கிளானா ஜெயா அம்னோ தொகுதிக் கூட்டத்தில் அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி, இஸ்கந்தர் குட்டி என்று தம்மை இழிவுபடுத்தியதாக அவர் மீது மகாதீர் வழக்கு தொடுத்துள்ளார். அரசியல் ஆதாயத்துக்காகத் தாம் மலாய்க்காரராக காட்டிக் கொண்ட தொனியில் பேசி, இந்திய முஸ்லிம்களை அவர் சிறுமைப்படுத்தியுள்ளார். தாம் நேர்மையற்றவன், நம்பத் தகாதவன், சுயநலவாதி, சொந்த ஆதாயத்திற்காக ஏமாற்று வேலையில் ஈடுபட்டவன் என அவர் தம்மை சித்திரித்திருப்பதாக மகாதீர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் பரவி தமது பெயருக்குக் களங்கத்தை உருவாக்கி இருப்பதால், நீதிமன்றம் தமக்குத் தகுந்த இழப்பீட்டை வாங்கித் தர வேண்டுமென மகாதீர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles