32.4 C
Kuala Lumpur
Sunday, July 26, 2026

Vetri

தலைமை நீதிபதிக்குக் கொலை மிரட்டல்: விசாரணை முடுக்கிவிடப்படும்

🔥 Views : 22
👁 Reading Now : 31

தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகப் போலீஸ் தலைவர் Acryl Sani Abdullah Sani அக்ரில் சானி அப்துல்லா தெரிவவித்துள்ளார். நஜிப் ரசாக்கின் எஸ்ஆர்சி வழக்கின் மேல் முறையீட்டு வழக்கை மற்ற நான்கு நீதிபதிகளுடன் தெங்கு மைமுன் விசாரித்து வரும் வேளையில், ஊடகங்களின் வாயிலாக நபர் ஒருவர், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அது பற்றிக் குறிப்பிட்ட அக்ரில் சானி, இம்மாதிரியான அராஜகப் போக்கை அனுமதிக்க முடியாது என்றும் சம்பந்தப்பட்ட நபர் விரைவில் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles