32.4 C
Kuala Lumpur
Sunday, July 26, 2026

Vetri

நெறிமுறைகளை மீறிய வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

🔥 Views : 21
👁 Reading Now : 55

நஜிப் ரசாக்கின் எஸ்ஆர்சி வழக்கில் பிரச்சினைகளை எழுப்பிய குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் மீது வழக்கறிஞர் மன்றம் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும்.
அது பற்றி வழக்கறிஞர் மன்றத் தலைவர் கேரன் சியா யீ லின் கூறும்போது, நஜிப்பின் வழக்கில் சில வழக்கறிஞர்கள் தொழிலுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது மன்றத்திற்கு இழுக்கு என்று குறிப்பிட்டார்.
நீதிக்குப் புறம்பாக நீதிமன்ற நடவடிக்கையை சிறுமைப்படுத்தும் வகையில் விவூகம் வகுத்து அவப்பெயரைச் சம்பாதித்து வந்ததைச் சகித்துக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்,
வழக்கறிஞர்கள் நீதியின் மாண்பினைக் கட்டிக் காத்து தொழில் தர்மத்துக்கு இணங்க செயல்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அதனை மீறுவோர் மீது நடவடிக்கை நிச்சயம் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles