
இங்கு அகதிகளாக வந்திருக்கும் மியன்மார் ரோஹிங்யா மக்களுக்கு வேலை கொடுக்கலாமா என்பது பற்றி உள்துறை அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென மனிதவள அமைச்சர் எம்.சரவணன் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது 103,090 ரோஹிங்யா அகதிகள் இருப்பதாகவும் அவர்களை வேலைக்கமர்த்தினால், அது இன்னும் அதிகமான ரோஹிங்யாக்கள் வர வழி வகுக்கும். இது நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலாக அமையும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
தொழில்துறையில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவினாலும் அவர்களை வேலைக்கமர்த்துவது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்ற அச்சமும் இருப்பதாக சரவணன் குறிப்பிட்டார்.



