31.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

தமது வங்கிக் கணக்கில் 42 மில்லியன் நிதி செலுத்தப்பட்டது நஜிப்பிற்கு தெரியும்

🔥 Views : 5
👁 Reading Now : 46

எஸ்ஆர்சி நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் தமது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதை நஜிப் ரசாக் அறிந்திருந்தார் என்று அரசின் நியமனம் பெற்ற வழக்கறிஞர் டத்தோ வி. சிதம்பரம் தெரிவித்தார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோக் சிக் நஜிப்பைப் பற்றித் தவறாகக் கூறியதை அடுத்து அவர் மீது வழக்கைத் தொடர்ந்த நஜிப், 2016 பிப்ரவரி 23ஆம் தேதியிட்ட அஃபிடெவிட்டில் அந்தப் பணம் தமது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதை எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளதாக சிதம்பரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், அவர் தமது அஃபிடெவிட்டில் அதனைக் குறிப்பிட்டதை லிங்கின் வழக்கறிஞர் ரஞ்சிட் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
14ஆவது பொதுத்தேர்தல் முடிவுற்ற பின்னர், லிங் மீதான வழக்கை நஜிப் மீட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles