
அம்னோவின் கருணையினால் தேர்தலில் வெற்றிபெறும் ம.இ.காவை பிச்சைக்காரர்கள் என Padang Rengas நாடாளுமன்ற உறுப்பினர் Mohamad Nazri Abdul Aziz வர்ணிதிருப்பது குறித்து ம.இ.கா கவலைப்படவில்லையென அக்கட்சியின் தேசியத் தலைவரான டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். அரசியல் விபச்சாரர்களாக இருப்பதைவிட பிச்சைக்காரர்களாக இருப்பது சிறந்ததுதான் என நஸ்ரிக்கு விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார். அம்னோ மற்றும் தேசிய முன்னணியை பொருட்படுத்தாமல் தனது சுயநலத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கக்கூடியவராக நஸ்ரி இருக்கிறார் என விக்னேஸ்வரர் சாடினார். தாம் கேட்பது கிடைக்காவிட்டால் உடனடியாக எதிர்க்கும் போக்கை உடையவர் நஸ்ரி என நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான் . அவர் எப்போதும் வெற்றி பெறும் குதிரையைத்தான் ஆதரிப்பார். வழியில் சாலைகள் பழுதுபட்டிருந்தால்கூட அவர் பொருட்படுத்த மாட்டார் . எனவே அவரது அறிக்கை குறித்து தாம் பொருட்படுத்தவில்லை என விக்னேஸவரன் கூறினார்.



