31.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

எம்ஏசிசியும் சட்டத் துறைத் தலைவரும் உண்மையைச் சொல்ல வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 39

மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Mohd Nazlan Ghazali (முகமட் நஸ்லான் கஸாலி) மீதான ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கை இப்போது யாரிடம் உள்ளது என்பதை ஊழல் தடுப்பு ஆணையமும் சட்டத் துறைத் தலைவரும் உண்மையைச் சொல்ல வேண்டுமென வழக்கறிஞர் ஸைட் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
எம்ஏசிசி அந்த அறிக்கையைச் சட்டத் துறையிடம் ஒப்படைத்துள்ளதாகக் கூறும் வேளையில், சட்டத் துறைத் தலைவரோ அது தம்மிடம் இல்லையென்று கூறுகிறார்.
இந்நிலையில் லண்டனில் உள்ள இணையதள எழுத்தாளார் Raja Petra Kamarudin (ராஜா பெத்ரா கமாருடின்) அந்த அறிக்கையின் நகலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எனவே, அவர் வெளியிட்டது உண்மையான அறிக்கையா என்பதை எம்ஏசிசியும் சட்டத் துறைத் தலைவரும் ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டுமென ஸைட் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles