
திரெங்கானு, மாராங்கில் சொந்த லோரியில் இருந்து வீசி எறியப்பட்ட ஓட்டுநர் ஒருவர் அதே லோரியில் நசுங்கி மாண்டார்.
கிழக்குக்கரை ரயில் திட்ட கட்டுமானத் திட்டத்தில் தாழ்வான பகுதியில் லோரி இறங்கிக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள ஆழமான பள்ளத்தில் அது நிலை தடுமாறி விழுந்தது. அதில் சிக்கி, நசுங்கிய ஓட்டுநர் Nasarudin Nasir (நசாருடின் நாசிர்) சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இச்சம்பவம் பிற்பகல் 12.50 மணியளவில் நேர்ந்ததாக மாராங் போலீஸ் தலைவர் Zain Mad Dris (ஸைன் மாட் டிரிஸ்) தெரிவித்தார்.



