31.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

புத்ரா ஜெயா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியா? ரட்ஷீ விளக்கம்

🔥 Views : 7
👁 Reading Now : 47

எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று வெளியான ஆருடங்கள் குறித்து முதன்மை கல்வி அமைச்சரான ரட்ஷீ ஜிடின் ( Radzi Jidin ) மறுத்தார். கடந்த சில நாட்களாக அவர் புத்ரா ஜெயாவில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருவதால் அவர் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஆருடங்களும் அதிகரித்துள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் கிளந்தான் கெத்தாரே ( Ketereh ) நாடாளுமன்ற தொகுதியில் பெர்சத்து கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரட்ஷீ அம்னோவைச் சேர்ந்த அனுவார் மூசாவிடம் தொல்வி கண்டார். கல்வி அமைச்சு ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்படுவதால் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக பெர்சத்து கட்சியின் உதவித் தலைவருமான ரட்ஷீ கூறினார். கல்வி அமைச்சு புத்ரா ஜெயாவில் இருப்பதால் கல்வி அமைச்சின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புத்ரா ஜெயா பொருத்தமான இடமாகவும் இருப்பதால் அதிகமாக நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவதாக அவர் விவரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles