33.5 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

பணத்திற்காக மலாய்க்காரர்களைப் பேயாய் அலைய வைத்து நஜிப் சாதனை

🔥 Views : 5
👁 Reading Now : 55

நஜிப் ரசாக்கின் மிகப் பெரும் சாதனையே ஊழல் பேர்வழி என்று பெயரெடுத்து பணத்திற்காக மலாய்க்காரர்களைப் பேயாய் அலைய வைத்ததாக துன் மகாதீர் சாடியுள்ளார்.
எந்தச் பிரதமரும் புரியாத காரியத்தைச் செய்து மலாய்க்காரர்களுக்கு பணத்தாசையை ஏற்படுத்தி தம்மைப் போலவே பண மோசடிகளில் ஈடுபட வைத்துள்ளதாக நஜிப்பை, மகாதீர் சாடினார்.
திருடுவதால் வெட்கப்பட என்ன இருக்கிறது என்ற சித்தாந்தத்தை நஜிப் போதித்து, அவரது அடிச்சுவட்டை மலாய்க்காரர்கள் பின்பற்ற வைத்துள்ளார்.
பணத்தைத் திருடுவதற்கும், இலவசமாகப் பெறுவதற்கும், கடனைச் செலுத்தாமல் இருப்பதற்கும், திருடனை தலைவனாக ஏற்றுக் கொள்வதற்கும், பிரதமரை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதற்கும் வெட்கப்பட என்ன இருக்கிறது என்ற மனப் போக்கை மலாய்க்காரர்களிடையே உருவாக்கியவர் நஜிப்பே என்றும் மகாதீர் குற்றம் சாட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles