
நாட்டில் நடக்கும் அத்தனை ஊழல்களுக்கும் மலாய்க்காரர்கள் காரணமில்லை, மாறாக அவர்களை ஊழலில் ஈடுபட வைப்பதே மலாய்க்காரர் அல்லாதவர்கள்தான் என்று பாஸ் கட்சித் தலைவர் Abdul Hadi Awang (அப்துல் ஹாடி அவாங்) குறிப்பிட்டு பெரிய குண்டையே தூக்கிப் போட்டிருப்பதாகப் பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
அவரது கூற்றின்படி மலாய்க்காரர் அல்லாதோர் பொருளாதாரத்தையும் அரசியலையும் ஆக்கிரமித்து, மலாய்க் காரர்களை ஊழல் புரியத் தூண்டியதே அவர்கள்தான் என்று கூறுகிறார்.
ஊழலுக்கு மலாய்க்காரர் அல்லாதோரே காரணம் என்று கூறும் ஹாடி அவாங், மலாய்க்காரர்கள் அப்பாவிகள், அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் குற்றமற்றவர்கள் என்றும் அவர் கூறுகிறாரா என்று ராமசாமி கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு ஹாடி அவாங் கூறி வருவது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதே அவரது தலையாய நோக்கம் என ராமசாமி குறிப்பிட்டார்.



