
நேற்று முன்தினம் நடைபெற்ற அம்னோவின் அவசரப் பொதுக்கூட்டத்தில் குழப்பமும் என்ன நடந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதில் பதில்களை விட கேள்விகளே அதிகம் என கூறப்பட்டுள்ளது.
அதில் எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்பது மர்மமாகவே இருக்கிறது. அதில் கலந்து கொண்டோர் பொதுத்தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டாலும், பிரதமரின் ஆதரவாளர்கள் அதில் 80 பேர் மட்டும் கலந்து கொண்டதாகத் தெரிவித்தனர்.
அக்கூட்டத்தில் நஜிப் ரசாக்கின் வழக்கில் பிரதமர் தலையிட்டு அவர் தண்டனையிலிருந்து விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறியிருந்தும் நஜிப்பின் ஆதரவாளர்கள் அதனை மறுத்துள்ளனர்.



