
சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்காக காஜாங் சிறைச்சாலைக்கு கொண்டுச் செல்வதற்கு முன் முன்னாள் பிரதமரான டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் தமது குடும்பத்ததிற்காக குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். குடும்பத்திற்காக போதுமான நேரத்தை செலவிட முடியாதது குறித்து அவர் கவலையை வெளியிட்டிருந்தார். குடும்பத்திற்காக போதுமான நேரத்தை தியாகம் செய்ய முடியாததற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் மக்கள், பொதுச் சேவைக்காக சேவையாற்ற வேண்டும் என்பதற்காக அதிக நேரத்தை செலவிட்டுள்ளேன். ஆனால் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் எப்போதும் இருக்க முடியாததற்காக நான் வருந்துகிறேன், வேதனைப்படுகிறேன். 1976 ஆம் ஆண்டு முதல் அரசியலிலும் , அரசாங்க பணியிலும் என்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டேன். அரசாங்க சேவையும் அரசியல் உலகமும் பலமும் பலவீனமும் சேர்ந்தே இருந்தது. விடியற்காலை முதல் நள்ளிரவுவரை சில விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். உணவு வேளையிலும் கூட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. விருந்தினர்களை சந்தித்தபோதுகூட நான் உங்களுடன் இல்லை. இப்போதைய சிறைத் தண்டனை குடும்பத்தினருடனான இடைவெளியை அதிகப்படுத்திவிட்டது. எனினும் நிலைமை மாறும். உலகத்தில் நாம் தற்காலிகமாகத்தான் வாழ்கிறேம். நாம் மீண்டும் அடுத்த உலகத்தில் மகிழ்ச்சியாக இருப்போம் என நஜீப் அந்த குறிப்பில் எழுதியுள்ளார்.



