
இங்கிலாந்தின் குயீன்ஸ் கவுன்சிலர் என சொல்லப்படும் Jonathan Laidlaw (ஜொனாதன் லாயிட்லோவ்), நஜிப்பிற்கு ஆஜராவதை அனுமதிக்காத கூட்டரசு நீதிமன்றத்தின் மீது வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். பிரபல வழக்கறிஞர் ஷாபி முகமட்டின் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் அந்த வழக்கு சார்வு செய்யப்பட்டுள்ளது. அதில் சட்டத்துறை அலுவலகம், அரசு வழக்கறிஞர்கள், மலேசிய வழக்கறிஞர் மன்றம் ஆகியோரைப் பிரதிவாதிகளாக அவர் குறிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர் மன்றத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் Bastian Pius Vendargon (பேஸ்டியன் பையஸ் வேந்தர்கோன்) உறுதிப்படுத்தினார். நஜிப் குற்றவாளிதான் என்று கூட்டரசு நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய அமர்வு உறுதிப்படுத்திய பின்னர், இந்த வழக்கை அவர் தொடுத்தது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஜூலை 21ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஜொனாதன் லாயிட்லோவ், நஜிப்பிற்கு ஆதரவாக வாதாட முடியாது, அவருக்குச் சிறப்புத் தகுதி இல்லையென்றும், நாட்டிலுள்ள வழக்கறிஞர்கள் நஜிப்பிற்கு ஆஜராக எல்லாத் தகுதிகளையும் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.



