29.7 C
Kuala Lumpur
Monday, July 27, 2026

Vetri

சிறைச்சாலையில் நஜிப்பிற்கு சிறப்புச் சலுகை தர வாய்ப்பில்லை

🔥 Views : 19
👁 Reading Now : 26

காஜாங் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வரும் நஜிப் ரசாக்கிற்கு சிறப்புச் சலுகை எதுவும் வழங்க வாய்ப்பில்லை என்று அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். தாம் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது, அது நரகமாக இருந்ததாகவும் அதனை தாம் நேர்மறையாக எடுத்துக் கொண்டு, தியானத்திலும், ஆன்மிகத்திலும், புத்தகங்களைப் படிப்பதிலும் காலத்தைக் கடத்தியதாகத் தெரிவித்தார். ஆனால், நல்ல நிலையில், சொகுசான வாழ்க்கையை அனுபவித்து துன்பம் என்பது என்னவென்றே தெரியாத நிலையில் நஜிப், சிறையில் இருப்பது இன்னும் கொடுமையான அனுபவமாக இருக்கும் என்று அன்வார் தெரிவித்தார். எனினும், அவரின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்குச் சில சலுகைகளை சிறைத்துறை அளிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles