
நேற்று மதியம் 150க்கும் அதிகமானோர் இஸ்தானா நெகாராவின் மூன்றாவது கேட்டில் ஒன்றுகூடி பேரரசர், நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பை உடனடியாக வழங்க வேண்டுமென அறைகூவல் விடுத்தனர். அரச மன்னிப்பு தரும் வரை அங்கிருந்து நகரப் போவதில்லை என்றும் அவர்கள் சூளுரைத்தனர். Pertubuhan Jalinan Perpaduan Negara Malaysia (பெர்துபோஹான் ஜாலினான் பெர்பாடுவான் நெகாரா மலேசியா) எனும் இயக்கத்தின் தலைவர் Syed Mohammad Imran Syed Abdul Aziz (சைட் முகமட் இம்ரான் சைட் அப்துல் அஸிஸ்) என்பவர் மகஜரை அரண்மனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடியும் அப்போதே அங்கு வர வேண்டுமென்றும் வலியுறுத்தினர். அதனையடுத்து, அந்தக் கும்பல் மதியம் 3.20 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றது.



