28.5 C
Kuala Lumpur
Thursday, June 4, 2026

Vetri

85 வயது மூதாட்டியைப் பலாத்காரம் செய்து கொலை செய்தார்; K.சத்தியராஜுக்கு மரண தண்டனை

🔥 Views : 5
👁 Reading Now : 33

85 வயது மூதாட்டியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கொலை செய்தது நிரூபிக்கப்பட்டிருப்பதை அடுத்து, K.சத்தியராஜ் எனும் ஆடவருக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

30 வயது சத்தியராஜ், சுயநினைவோடு தான் அக்குற்றத்தைப் புரிந்திருந்தது, சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிப்பதாக நீதிபதி அறிவித்தார். அதோடு சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதையும் அவரால் தெள்ளத் தெளிவாக நினைவுகூர முடிவதாக நீதிபதி விளக்கினார்.

2019ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தின் போது திருடும் நோக்கத்தோடு வீட்டுக்குள் புகுந்த அவ்வாடவர், அங்கிருந்த மூதாட்டியின் கைகளைக் கட்டிப் போட்டு அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் அவரைக் கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த நகைகளை சத்தியராஜ் கொள்ளையடித்துச் சென்றது நிரூபனமாகியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles