
செலாயாங் பசாரில் தினசரி சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு இறுதி வரை இலவச வாடகை வழங்கப்படும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.
வரும் செவ்வாய் கிழமை முதல் புதிய கட்டடடத்தில் வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை தொடங்குகிறார்கள். வாடகையை குறைத்துக் கொள்ள வேண்டும் என எங்களுக்கு ஒரு விண்ணப்பம் வந்துள்ளது .
ஆனால் நாங்கள் அவர்களுக்கு இந்த இடத்தை இலவசமாக வழங்க முடிவு செய்திருக்கிறோம். இந்த ஆண்டு இறுதிவரை அவர்கள் வாடகைப் பணத்தை செலுத்த தேவையில்லை.
இது அவர்களின் சுமையை குறைக்கும் என்று அவர் சொன்னார்.
