29 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

தடுப்புக் காவல் மரண சம்பவங்களின் நடவடிக்கையில் அமலாக்க அதிகாரிகள் தோல்வி!

நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருக்கும் தடுப்புக் காவல் மரண சம்பவங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்,அமலாக்க அதிகாரிகள் தோல்வி கண்டுள்ளனர் என மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தேசியத் தலைவர் டேவிட் மார்ஷெல் கூறினார்.போலீசாரின் அதிகாரமும்,தவறாக நடந்துக்,கொள்ளும் முறையும் தேவையற்றது.இந்த மரண சம்பங்களை விசாரிக்க உள்துறை அமைச்சு சுயேச்சை விசாரணைக் குழுவை அமைப்பது,தடுப்புக் காவலில் சிறப்பு சுகாதாரப் பிரிவை தயார்படுத்துவது,மரண விசாரணைகள் இயல்பான முறையில் நடைபெறுவது,ஐபிசிஎம்சி போன்ற விசாரணைக்குழு போன்றவற்றை அமைக்க வேண்டுமென செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினருமான டேவிட் மார்ஷெல் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று இந்தியர்கள் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்த சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles