27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மக்கள் சக்தியின் பேராளர் கூட்டத்தில் நஜிப்பிற்கு புகழாரம்

🔥 Views : 9
👁 Reading Now : 20

மக்கள் சக்திக் கட்சியின் 14ஆவது பேராளர் மாநாடு நேற்று கோலாலம்பூர் புத்ரா வாணிப மையத்தில் நடைபெற்றது.
அதில் உரையாற்றிய தலைவர் ஆர்.எஸ்.தனேந்திரன், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு புகழாரம் சூட்டினார்.
நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டவர், மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் இந்திய மாணவர்களுக்கு இடம் அளித்ததாகவும் இந்தியர்களின் வளர்ச்சிக்குக் கோடிக் கணக்கில் அள்ளிக் கொடுத்ததோடு, இந்தியர் மேம்பாட்டுப் பெருந்திட்டதையும் உருவாக்கியதாகவும் குறிப்பிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் நஜிப்பின் பிள்ளைகள் நிஸாரும், நூர்யான நஜ்வாவும் தங்களது தந்தையாரைப் பற்றி விரிவாகப் பேசினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles