
24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரிங்கிட்டின் மதிப்பு படு மோசமாகச் சரிவை அடைந்த போதும், அரசு மெளனம் காப்பது ஏன் என்று கெப்போங் எம்பி லிம் லிப் எங் கேள்வி எழுப்பினார்.
இது பொருளாதாரச் சீர்குலைவைக் கொண்டுவரும் என்பதால் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அஸிஸும் மெளனம் காப்பது சந்தேகத்தை வலுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ரிங்கிட்டின் மதிப்புச் சரிவால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படும். இறக்குமதிப் பொருள்களின் விலை அதிகரித்து மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் இறுதியில், அது பண வீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.


