25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

சுகாதாரச் சேவையில் மாற்றம் பரிந்துரைக்கப்படும்

சுகாதாரச் சேவையில் புதிய மாற்றங்களைப் பரிந்துரைக்கப் போவதாக மலேசிய மருத்துவக் கழகத்தின்(எம்எம்ஏ) புதிய தலைவர் டாக்டர் முருகராஜ் ராஜதுரை தெரிவித்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கோவிட் நோயைக் கட்டுப் படுத்துவதில் பெரும் பங்காற்றிய அமைச்சர் கைரி ஜமாலுடினை வெகுவாகப் பாராட்டினார்.
மருத்துவர்களின் பற்றாக்குறை, ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தர வேலை போன்றவை முக்கிய பிரச்சினைகளாக இருப்பதால், அவற்றைக் களைய எம்எம்ஏ தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனைகளில் பகடிவதைப் பிரச்சினை அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, ஆவண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles