
கோலாலம்பூர், பத்து தொகுதியில் போட்டியிட தாம் ஆர்வம் கொண்டிருப்பதாக பிகேஆரின் முன்னாள் உதவித் தலைவர் தியான் சுவா குறிப்பிட்டுள்ளார்.
2008லிருந்து அத்தொகுதியில் வெற்றி பெற்று வந்த அவர் 2018இல் போட்டியிட முடியாத நிலையில், அங்கு சுயேச்சையாகப் போட்டியிட்ட பிரபாகரன் வெற்றி பெற்று, பின்னர் பிகேஆரின் உறுப்பினராகச் சேர்ந்தார்.
அண்மையில் அங்கு நடந்த கட்சித் தேர்தலில், பிரபாகரன் தியான் சுவாவை தோற்கடித்து தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். இப்போது அவரும் அத்தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்புகிறார்.
அத்தொகுதி மக்களின் விருப்பத்திற்கிணங்க தாம் போட்டியிட விரும்புவதாகவும், கட்சித் தலைமைத்துவம் அனுமதித்தால் அங்கு போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் தியான் சுவா தெரிவித்தார்.
