28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

பீடோர் ஹெலிகாப்டர் விபத்தில் விமானி உயிரோடு
கண்டு பிடிக்கப்பட்டார்

🔥 Views : 8
👁 Reading Now : 55

பேராக், பீடோரின் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விமானி சம்பவ இடத்தில் உயிரோடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாகப் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.
கடுமையாகக் காயமடைந்திருக்கும் விமானி சிகிச்சைக்காக ஈப்போ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நேற்று, சுபாங் விமான நிலையத்தில் இருந்தது ஈப்போவுக்குச் சென்ற அந்த யூரோகோப்டர் இசி120பி ரக ஹெலிகாப்டர் ராடார் கருவியில் இருந்து காணமல் போனதாகவும், பிற்பகல் 12.37 மணிக்கு சுபாங்கிற்கு திரும்பாததாலும் அதனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
மோசமான சீதோஷ்ண நிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஹாங்காங்கைச் சேர்ந்த அதன் விமானி ஹெலிகாப்டரை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles