26.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

துரோகிகளிடம் இருக்கும் பக்காத்தான் தொகுதிகளைக் கைப்பற்றுவோம்

🔥 Views : 35
👁 Reading Now : 64
  • அன்வார் இப்ராஹிம் சூளுரை

கட்சி தாவிய துரோகிகளின் வசமிருக்கும் பக்காத்தான் தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என அன்வார் இப்ராஹிம் சூளுரைத்துள்ளார்.
பக்காத்தானில் இருந்து பெரிக்காத்தானுக்கு கட்சி தாவிய அஸ்மின் அலியின் தொகுதியான கோம்பாக்கில்
நேற்று நடந்த ராப்பாட் மெகா எனும் மக்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அன்வார், துரோகிகளிடம் இருக்கும் தொகுதிகளைக் கைபற்றுவோம் என்று சூளுரைத்தார்.
கோம்பாக்கிலும் அம்பாங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கும் கட்சிக்கும் துரோகம் இழைத்து, கட்சி மாறியதால், அவர்களைத் தோற்கடித்தே ஆக வேண்டுமென அவர் குறிப்பிட்டார் .
அம்பாங்கில் ஸுரைடா கமாருடினும் கோம்பாக்கில் அஸ்மின் அலியும் பிகேஆரின் சார்பில் வென்ற பின்னர், ஷெரட்டன் நகர்வுக்குப் பின்னர் பெரிக்காத்தானில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles