24.7 C
Kuala Lumpur
Sunday, July 19, 2026

Vetri

ரிம. 42 மில்லியன் என்பது நஜிப்பிற்கு 40 காசுகள் போன்றது!

🔥 Views : 14
👁 Reading Now : 27

நஜிப் ரசாக்கின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் பணமானது சவூதி மன்னர் நன்கொடையாகக் கொடுத்தது என்று அவர் வாளாவிருந்ததாக புக்கிட் கந்தாங் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் சொலேஹின் தாஜீ தெரிவித்தார்.
அந்தப் பணம் தமது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது முதலில் அவருக்குத் தெரிய வரவில்லை என்றும், அது தெரிந்த பின்னர், இதற்கு முன்னர் சவூதி மன்னர் 260 கோடி ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கியது போலவே, அதுவும் நன்கொடைதான் என நஜிப் நினைத்து விட்டதாக சொலேஹின் தெரிவித்தார்.
260 கோடியை ஒப்பிடும்போது, 42 மில்லியன் ரிங்கிட் என்பது நஜிப்பிற்கு வெறும் 42 காசுகள் போன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவரின் இந்த விளக்கமானது டிக் டோக் செயலியில் வெளியான பின்னர், பலரும் அதனைக் கண்டித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles